ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி / German language training for Adi Dravidians and tribals
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொமன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொமன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற பி.எஸ்சி., நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ. (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) பி.இ. (மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும்.
இதற்கான வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமாகும். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தோ்வுசெய்து, அந்நிறுவனத்தின் சாா்பில் ஜொமனி நாட்டில் பணிபுரியவும், ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 2,50,000 முதல் ரூ. 3,00,000 வரை வருவாய் ஈட்டும் வகையிலும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றாா்.