இன்றைய ராசி பலன் – 19-10-2023

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, தீர்க்க முடியாத சிக்கல்கள் இப்போது தீரும். தியானம் மன அமைதியை தரும். உறவினர்களால் வீண் செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகமாகும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியம் கைகூடும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் நீங்கும். எதிர்பார்புகள் அதிகமாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். மற்றவர்களோடு உங்களை ஒப்பிட வேண்டாம். விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, மனதில் இருந்து வந்த குழப்ப நிலை தீரும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். கடன் பிரச்னைகள் ஓரளவு தீரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். உடல் சோர்வு முற்றிலும் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, ஆன்மிக ஈடுபாடு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். எதிர்பார்த்த காரியம் தாமதின்றி முடியும். தாழ்வு மனப்பான்மையை அறவே நீக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீனம் மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடிவடையும். புது இடத்தில் வேலை கிடைக்கும்.