Today’s Gold Rate / இன்றைய தங்கம் விலை நிலவரம் – 08-04-2025

Today Gold Rate: 12-04-2025

கடந்த 2024 ஆம் ஆண்டு மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தங்கத்தின் விலை உயராமல், ஒரு சவரன் ரூ.56 ஆயிரம் என நிலையாக இருந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி பயணித்து 2025 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. மேலும், டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் – சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது.

இந்நிலையில் “நேற்று (11-04-2025) தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,745 எனவும் , சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960 என விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று (12-04-2025) 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770 எனவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,160 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது”.