Sat. Aug 30th, 2025

எல்ஐசி பீமா சகி யோஜனா: பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் / LIC Bima Sakhi Yojana: For women to become LIC agents and get a monthly stipend along with proper training

எல்ஐசி பீமா சகி யோஜனா: பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் / LIC Bima Sakhi Yojana: For women to become LIC agents and get a monthly stipend along with proper training

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.

இதன் கீழ் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறலாம். பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த எல்ஐசி திட்டம், பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் இந்த திட்டம் எல்ஐசி நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்ததிட்டப்படி எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெற முடியும். புதிய எல்ஐசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் சேர முடியும். என்ன விவரம் என்பதை பார்ப்போம். எல்ஐசி பீமா சகி என்ற இந்த திட்டத்தின் உறுப்பினர்களுக்கு முதல் ஆண்டில் மாதத்திற்கு ரூ.7000 வழங்கப்பட உள்ளது.

எல்ஐசி பீமா சகி யோஜனா

இந்திய மக்கள்தொகையில் சரி பாதி பேருக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்ஐசி நிறுவனம் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இதன் கீழ் சந்தாதாரர்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறுவார்கள். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டதுதான் இந்த எல்ஐசி திட்டம். பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் வாய்ப்பு தருகிறது.

எல்ஐசி பீமா சகி யோஜனா: வயது வரம்பு மற்றும் நிபந்தனைகள்

எல்ஐசி பீமா சகி யோஜனாவின் கீழ், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணிபுரிவார்கள். முதல் வருடத்திற்கு மாதந்தோறும் ரூ.7000 நிலையான தொகையைப் பெறுவார்கள். அதன் பிறகு, முதல் வருடத்தில் திறக்கப்பட்ட பாலிசிகளில் குறைந்தது 65 சதவீதமாவது ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், இரண்டாம் ஆண்டு முதல் முகவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 கிடைக்கும். இந்தத் திட்டதின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

எல்ஐசி பீமா சகி யோஜனா: யார் தகுதியற்றவர்கள்?

குறிப்பாக, ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியர்கள், முன்னாள் எல்ஐசி ஊழியர்கள், முன்னாள் எல்ஐசி முகவர்கள், எல்ஐசி முகவர்களின் உறவினர்கள் ( எல்ஐசி முகவர்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களின் மாமியார்) போன்ற பெண்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.

பீமா சகி யோஜனா இந்தியப் பெண்களுக்கு எப்படி உதவும்?

இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுகிறார்கள். இது எல்ஐசி முகவர்களாக ஒரு தொழிலை உருவாக்க உதவுகிறது. ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, இந்தத் திட்டம் பெண்களை அவர்களின் சமூகங்களில் ஆயுள் காப்பீட்டுத் தயாரிப்புகளை திறம்பட ஊக்குவிக்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களைவளர்க்கும் வகையில் இருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக, பீமா சகி திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தான்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *