Mon. Jul 21st, 2025

ஏப்ரல் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

ஏப்ரல் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

நமது பணத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் உள்ளன. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணை படி, வார இறுதி நாட்களை தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2025

ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு முடிவு காரணமாக வங்கி திறந்திருந்தாலும், பொதுமக்கள் சேவை இல்லை.

ஏப்ரல் 5, 2025

ஏப்ரல் 5ல் பாபு ஜெகஜீவன் ராம் ஜெயந்தி காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வங்கி விடுமுறை

ஏப்ரல் 6, 2025

ஏப்ரல் 6ம் தேதி ஞாயிறு மற்றும் ராம நவமி காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 10, 2025

மகாவீர் ஜெயந்தி காரணமாக குஜராத், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் வங்கி சேவை இல்லை.

ஏப்ரல் 12, 2025

ஏப்ரல் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 13, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 14, 2025

அம்பேத்கர் ஜெயந்தி நாள் என்பதால் தலைநகர் டெல்லி உள்பட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 15, 2025

பெங்காலி புத்தாண்டு, போக் பிஹு, இமாச்சலப் பிரதேச தினம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 16, 2025

போக் பிஹு காரணமாக அசாம் மற்றும் சில பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 18, 2025

புனித வெள்ளி நாளான ஏப்.18 அன்று திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

ஏப்ரல் 20, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 21, 2025காரியா பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 26, 2025

நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 27, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 29, 2025

பரசுராம் ஜெயந்தி காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் வங்கி விடுமுறை.

ஏப்ரல் 30, 2025

பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கர்நாடகாவில் வங்கிகளுக்கு விடுமுறை

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *