பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி / Bakery product preparation training
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் 19,20 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பேக்கரி உணவு பொருட்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களின் வருமானத்தை பெருக்க உதவியாக இருக்கும். இதில், ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் தயாரித்தல் போன்ற பொருட்கள் தயாரிக்க எளிய முறையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும். பயிற்சி பல்கலை.யின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்கிறது. கூடுதல் தகவலுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது