வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் / Want to work abroad? Must-know guidelines
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் தமிழா்கள் முக்கியமான தகவலை தவறவிடக்கூடாது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டபூர்வமாக வேலை வாய்ப்பு பெறும் முக்கிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ வேலை முகவர்களுக்காகவே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
வேலை ஒப்பந்தம், வேலை தொடர்பான விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
சுற்றுலா விசாவில் (Tourist Visa) வெளிநாட்டு வேலைக்கு செல்லுதல் சட்ட விரோதமாக கருதப்படும். இது உங்களுடைய பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும்.
உங்கள் சந்தேகங்களுக்கு அரசு உதவி மையம் இலவசமாக சேவை அளிக்கிறது:
இணையதளம்: https://www.mea.gov.in/
இந்தியாவில் இருந்து அழைப்பதற்கான இலவச எண்: 1800 309 3793
வெளிநாடுகளில் உள்ளவர்கள் அழைக்க:
0806 900 9900 / 0806 900 9901
இந்த இலவச உதவி மையம், வெளிநாட்டுச் சென்ற தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பு வழிமுறைகள், சிக்கல்களை தீர்க்கும் வழிகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.