கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு / Village Assistant Job: Applications Welcome
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள் : 2,300
சம்பளம்: மாதம் ரூ.11,100 – 35,100
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
மிதிவண்டி , இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர் மனைவியோ, கணவரோ உயிரோடு இருக்கும் போது, வேறொரு திருமணம் செய்திருக்கக் கூடாது.
வயது வரம்பு: பொதுப் பிரி வினர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்சி பிரிவினர் 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதி, இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணைய தள What’s New பகுதியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.8.2025
விண்ணப்பிக்கத் தேவையான கூடுதல் விபரங்களை தங்களது கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளவும் அல்லது விண்ணப்பப் படிவம் மற்றும் மேற்கண்ட வேலை வாய்ப்பு விபரம் அந்தந்த மாவட்ட இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.