Tue. Oct 14th, 2025

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு – 41 பணியிடங்கள் / Chennai High Court Job Vacancy – 41 Vacancies

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு – 41 பணியிடங்கள் / Chennai High Court Job Vacancy – 41 Vacancies

சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி நிரலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கணினி சார்ந்த படிப்புகளை முடித்தவரா நீங்கள்? சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபடியாக ரூ.1.31 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
உதவி புரோகிராமர் 41
இதில் Backlog காலிப்பணியிடங்கள் 7 மற்றும் தற்சமய காலிப்பணியிடங்கள் 41 என நிரப்பப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தொழில்நுட்ப மனிதவளம் விதிகள், 2017 கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு

  • நீதிமன்ற தொழில்நுட்ப பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும்.
  • அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 01.07.1988 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது.
  • அதே போன்று, பொது பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 01.07.1993 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி

  • உதவி புரோகிராமர் பதவிக்கு இளங்கலை அறிவியல் (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை அறிவியல் (BCA) உடன் 3 வருட சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • விண்ணப்பதார்கள் பொறியியல் பட்டப்படிப்பு (BE., / B.Tech), கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு ( MCA), முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு (M.Sc) ஆகிய ஏதேனும் ஒரு படிப்பை முடித்து, 2 ஆண்டு சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • முதுகலை பொறியியல் (M.E., / M.Tech) உடன் 1 ஆண்டு சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சாப்ட்வேர் பொறியியல்/ செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேனிங்/ கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை-13 கீழ் ரூ.35,900 முதல் அதிகபடியாக ரூ.1,31,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 3 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 120 கொள்குறி வகை (Objective type) கேள்விகள் கொண்டு நடைபெறும். வினாத்தாள் 50 கேள்விகள் தமிழ் மொழி தகுதி ஆகும். இதர 70 கேள்விகள் முதன்மை பாடத்தை கொண்டு அமையும். முதன்மை பாடப்பகுதிக்கு நெகட்டிங் மார்க்கிங் உள்ளது.

இதில் தேர்ச்சி பெறும் நபர்கள் திறன் தேர்விற்கு தகுதி அடைவார்கள். திறன் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கணினி திறனை நிரூபிக்க வேண்டும். தொடர்ந்து, வைவா (Viva-voce) தகுதி அடைவார்கள். இது 25 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதனுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இறுதியாக எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவாவில் பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். தமிழ் மொழி தாள் தகுதித் தேர்வு மட்டுமே.

விண்ணப்பிப்பது எப்படி?
உயர்நீதிமன்றம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பம் தொடக்கப்பட்ட நாள்10.08.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்09.09.2025
எழுத்துத் தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் நிரப்பப்படும் தொழில்நுட்ப பணிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தேர்விற்கான பாடத்திட்டம் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தேதி, ஹால் டிக்கெட் உள்ளிட்டவை இணையதளத்தில் வெளியிடப்படும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *