மாதம் 40ஆயிரம் சம்பளம் – வெளிநாட்டில் production, Quality Inspector மற்றும் Electrical Maintenance வேலை / Salary 40 thousand per month – Production, Quality Inspector and Electrical Maintenance jobs abroad
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஓமனில் Production, Quality Inspector மற்றும் Electrical Maintenance பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது.
Diploma/ITI தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, விசா, இருப்பிடம், விமான பயணச்சீட்டு இலவசம்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது. அடுத்ததாக பல வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்தில் அதிகளவு குவிந்து வருகிறது.
இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடுத்ததாக வெளிநாட்டிற்கு சென்று கை நிறைய சம்பளம் வாங்குபவர்களுக்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Final Inspection) மற்றும் Electrical Maintenance Quality/தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் பணிபுரிய Diploma in Mechanical Engineer /ITI தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 26 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process Control) Quality Inspector (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Electrical Maintenance பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Passport Original & Copy) Aadhaar Copy & Photo ஆகியவற்றை 15.08.2025க்குள் அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.