Wed. Oct 15th, 2025

விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலை / New job from Wipro IT company

விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலை / New job from Wipro IT company

விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை.

2025ம் ஆண்டில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் Elite பிரிவில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் Circuital பிரிவுகளில் 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கை பொறுத்தவரை 60 சதவீதம் அல்லது CGPA 6.0 என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர் இருக்ககூடாது.

இதுதவிர விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீதம் அல்லது அதற்கு அதிக மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் Open School அல்லது Distance Education என்பது 10, பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 படிப்பை இடைவெளி விட்டு படித்து இருக்கலாம். அதிகபட்சம் 3 ஆண்டு வரை இடைவெளி இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி இருக்க கூடாது.

அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.29,166 சம்பளமாக கிடைக்கும். ஆனால் இந்த பணிக்கு 12 மாத Service Agreement என்பது உள்ளது. இதனை மீறி 12 மாதத்துக்குள் பணியில் இருந்து விலகினால் விப்ரோவுக்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருக்கும்.

தற்போதைய Project Engineers பணிக்கு 3 பிரிவுகளில் இண்டர்வியூ என்பது நடக்கும். முதல் ரவுண்ட்டில் ஆன்லைன் அசஸ்மெண்ட்-டில் Aptitude Test, Written Communication Test, Online Programming Test இருக்கும். இதில் Coding Test-ல் விண்ணப்பதாரர்கள் Java, C, C++ அல்லது பைத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 2வது ரவுண்ட் என்பது Business Discussion, 3வது ரவுண்ட் என்பது HR Discussion என்ற முறையில் இருக்கும்.

இந்த பணிக்கு ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் கடந்த 3 மாதத்தில் விப்ரோவில் எந்த இண்டர்வியூம் அட்டெர்ன் செய்திருக்க கூடாது. அப்படி அட்டெர்ன் செய்யாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இது ஒரு PAN INDIA வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யClick Here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *