100+ சொல் இலக்கணம் வினா விடைகள் – TNPSC
- இலக்கண அடிப்படையில் சொற்களின் வகைகள்
அ) 2 ஆ) 3
இ) 4 ஈ) 5 - பெயர்ச் சொல்லுக்கான எடுத்துக் காட்டினைத் தேர்ந்தெடு
அ) எழுது ஆ) மாநகரம்
இ) பள்ளி ஈ) மற்றொருவர் - பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது _
அ) இடைச்சொல் ஆ) உரிச்சொல்
இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை - பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும் சொல்
அ) இடைச்சொல் ஆ) உரிச்சொல்
இ) இயற்சொல் ஈ) திரிச்சொல் - இலக்கண அடிப்படையில் 4 வகைச் சொற்களுள் அல்லாதவற்றை தோர்ந்தெடு
அ) பெயர்ச்சொல் ஆ) இடைச்சொல்
இ) திசைச்சொல் ஈ) உரிச்சொல் - இலக்கிய அடிப்படையில் 4 வகைச் சொற்களுள் அடங்காததைத் தேர்ந்தெடு
அ) இயற்சொல் ஆ) வினைச் சொல்
இ) திரிச்சொல் ஈ) வடசொல் - தவறான கூற்றினைத் தேர்ந்தெடு
அ) இடைச்சொல் – மற்றொருவர் ஆ) உரிச்சொல் – சாலச்சிறந்தது
இ) பெயர்ச்சொல் – கண் ஈ) வினைச்சொல் – நன்மை - இடைச் சொல் அல்லாததைத் தேர்ந்தெடு
அ) ஐ ஆ) உம் இ) மா ஈ) மற்று - ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் _
அ) பெயர்ச் சொல் ஆ) வினைச் சொல்
இ) இடைச் சொல் ஈ) உரிச்சொல் - பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்?
அ) 4 ஆ) 6 இ) 8 ஈ) 9 - பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் _
அ) பண்பு பெயர் ஆ) தொழிற்பெயர்
இ) சினைப்பெயர் ஈ) பொருட்பெயர் - பண்புப் பெயருக்கான எடுத்துக்காட்டு அல்லாததைத் தேர்ந்தெடு
அ) சதுரம் ஆ) செம்மை இ) ஆடுதல் ஈ) நன்மை - கூற்றினை ஆராய்க
1) காலப் பெயர் – ஆண்டு
2) சினைப் பெயர் – கிளை
3) இடப் பெயர் – வட்டம்
4) தொழிற் பெயர் – படித்தல்
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) 4 மட்டும் தவறு - இடுகுறிப் பெயரின் வகைகள் _
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 6 - இடுகுறிச் சிறப்புப் பெயருக்கான எடுத்துக் காட்டினைத் தேர்ந்தெடு
அ) மரம் ஆ) நாற்காலி இ) காடு ஈ) கருவேலங்காடு - காரணப் பொதுப் பெயருக்கான எடுத்துக் காட்டினைத் தேர்ந்தெடு
அ) பறவை ஆ) கரும்பலகை இ) வளையல் ஈ) மரங்கொத்தி - இடுகுறிச் சிறப்புப் பெயரைத் தேர்ந்தெடு
அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொத்தி ஈ) பறவை - காரணப் பெயரை வட்டமிடுக
அ) மரம் ஆ) வளையல் இ) சுவர் ஈ) யானை - பொருத்துக
1) இடுகுறிப் பொதுப்பெயர் – அணி
2) இடுகுறிச் சிறப்புப்பெயர் – காடு
3) காரணப் பொதுப்பெயர் – மா
4) காரணப் சிறப்புப்பெயர் – மரங்கொத்தி
அ) 2314 ஆ) 1234 இ) 2341 ஈ) 4213 - பொருத்துக
1) பொருட் பெயர் – மாலை
2) காலப் பெயர் – இலை
3) பண்புப் பெயர் – புத்தகம்
4) சினைப் பெயர் – இனிமை
அ) 1234 ஆ) 2143 இ) 3142 ஈ) 4123 - எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்
அ) இயற்சொல் ஆ) திரிச்சொல்
இ) திசைச்சொல் ஈ) வடசொல் - இயற்சொல்லுக்கான எடுத்துகாட்டு அல்லாததைத் தேர்ந்தெடு
அ) எழுதினான் ஆ) கப்பல்
இ) சாற்றினான் ஈ) படித்தான் - கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்
அ) இயற்சொல் ஆ) திரிச்சொல்
இ) திசைச்சொல் ஈ) வடசொல் - பல பொருள் தரும் ஒரு சொல் என்பது
அ) இயற்சொல் ஆ) திரிச்சொல்
இ) திசைச்சொல் ஈ) வடசொல் - வடமொழி என அழைக்கப்படும் மொழி
அ) மலையாளம் ஆ) கன்னடம்
இ) சமக்கிருதம் ஈ) தெலுங்கு - வட சொற்களின் வகைகள் ; _
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 - கூற்றினை ஆராய்க
1) வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள.;
2) லஹ்மி என்பதை இலக்குமி என மாற்றி எழுதுவது தற்சமம் எனப்படும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - வட சொல் அல்லாததைத் தேர்ந்தெடு
அ) வருடம் ஆ) சக்கரம் இ) கமலம் ஈ) சன்னல் - பொருத்துக
1) பெயர்த் திரிச்சொல் – கூர்
2) வினைத் திரிச்சொல் – அழுவம்
3) இடைத் திரிச்சொல் – இயம்பினான்
4) உரித் திரிச்சொல் – அன்ன
அ) 1234 ஆ) 2341 இ) 4123 ஈ) 3142 - கூற்றினை ஆராய்க
1) வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிச்சொற்கள் என்பர்.
2) இதழ் என்னும் சொல் புவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருளைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - திசைச் சொல் அல்லாததைத் தேர்ந்தெடு
அ) பெற்றம் ஆ) இரயில்
இ) கேணி ஈ) மாதம் - தவறானவற்றை தேர்ந்தெடு
அ) இடைத்திரிச் சொல் – அன்ன,மான ஆ) உரித்திரிச்சொல் – கூர்,கழி
இ) பெயர்த் திரிச்சொல் – கடல்,கப்பல் ஈ) இயம்பினான்,பயின்றானள் - கீழே உள்ளவற்றில் வட சொல்லைத் தேர்ந்தெடு
அ) குங்குமம் ஆ) பண்டிகை இ) சன்னல் ஈ) ரயில் - இடைச் சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர்
அ) பெரியார் ஆ) தொல்காப்பியர்
இ) பவணந்தி முனிவர் ஈ) அண்ணா - எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை என்னும் பொருள்களில் வரும் இடைச்சொல்
அ) இன் ஆ) ஐ இ) உம் ஈ)உடைய - இதில் சரியான தொடரைத் தேர்ந்தெடு
அ) இது பழம் அல்ல ஆ) இவை பழம் அல்ல
இ) இவை பழங்கள் அன்று ஈ) இது பழம் அன்று - கீழ்க்காணபனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு
அ) எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது ஆ) எத்துனை பெரிய மரம், எத்தனை ஆண்டு பழைமையானது
இ) எத்துணை நூல்கள் வேண்டும் ஈ) அனைத்தும் சரி - மிகுதி என்னும் பொருளில் வரும் உரிச் சொல்லைத் தேர்ந்தெடு:
அ) உறு ஆ) தவ இ) நனி ஈ) அஆஇ ழூன்றும் - கூற்றிணை ஆராய்க
1) அன்று என்பது ஒருமைக்கு உரியது 2) அல்ல என்பது பன்மைக்கு உரியது
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - கூற்றிணை ஆராய்க
1) எத்தனை என்பது அளவைக் குறிக்கும்.
2) எத்துணை என்பது அளவையுத் காலத்தையும் குறிக்கும்.
3) எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 1ம் 2ம் சரி ஈ) 2ம் 3ம் சரி - முடிந்த வரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களில் வரும் இடைச் சொல்
அ) மட்டும் ஆ) தான் இ) ஆவது ஈ) கூட - பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் _
அ) வினையெச்சம் ஆ) வினைமுற்று
இ) பெயரெச்சம் ஈ) வினைத்தொகை - கூற்றிணை ஆராய்க
1) வினைமுற்று, முற்றுவினை எனவும் அழைக்கப்படும்.
2) வினைமுற்று ஐந்து பால், ழூன்று காலம், ழூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - வினைமுற்றின் வகைகள் _
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 - செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது _
அ) குறிப்பு வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று _
அ) குறிப்பு வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) ஏவல் வினைமுற்று - காலத்தினைக் குறிக்கும் குறிப்பு வினைமுற்றைத் தேர்ந்தெடு
அ) கண்ணன் ஆ) ஆதிரையான்
இ) பொன்னன் ஈ) கரியன் - பொருளினைக் குறிக்கும் குறிப்பு வினைமுற்றைத் தேர்ந்தெடு
அ) கண்ணன் ஆ) ஆதிரையான்
இ) பொன்னன் ஈ) கரியன் - பொருத்துக: குறிப்பு வினைமுற்று
1) இடம் – கரியன்
2) பண்பு – தென்னாட்டார்
3) தொழில் – கண்ணன்
4) சினை – எழுத்தன்
அ) 1234 ஆ) 2143 இ) 4123 ஈ) 3142 - ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று _
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) குறிப்பு வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - வியங்கோள் வினைமுற்று பற்றிய தவறான தொடரினை தேர்ந்தெடு
அ) வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று. . ஆ) வியங்கோள் வினைமுற்று இருதிணைகளையும், ஐந்து பால்களையும் காட்டும்.
இ) வியங்கோள் வினைமுற்று ழூன்று இடங்களையும் காட்டாது.
ஈ) வியங்கோள் வினைமுற்றில் விகுதிகள் க,இய,இயர்,அல் என வரும். - ஏவல் வினைமுற்று பற்றிய தொடரினை ஆராய்க
1) ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இரு வகைகளிpல் வரும்.
2) ஏவல் வினைமுற்றில் எழுது – ஒருமை, எழுதுமின் – பன்மையை குறிக்கும்.
3) பன்மை ஏவல் வினைமுற்று – எழுதுங்கள் என்பது இக்கால வழக்கு.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) ழூன்றும் சரி - கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்தி, விகுதி பெற்றும் பெறாமலும் வரும் வினைமுற்று _
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) குறிப்பு வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - இரு திணை, ஐம்பால், ழூலிடங்களுக்கு பொதுவாக விகுதி பெற்றே வரும் வினைமுற்று
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) குறிப்பு வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - ‘ எழுதினான் ‘ – என்னும் சொல் குறிக்கும் வினைமுற்று
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) குறிப்பு வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _
அ) வினைமுற்று ஆ) பண்புத்தொகை
இ) எச்சம் ஈ) வினைத்தொகை - நிகழ்காலப் பெயரெச்சத்தினைத் தேர்ந்தெடு
அ) படித்த மாணவன் ஆ) படித்த பள்ளி
இ) பாடுகின்ற பாடல் ஈ) பாடும் பாடல் - கூற்றிணை ஆராய்க
1) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்
2) பெயரெச்சம் ழூன்று காலங்களிலும் வராது
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் _
அ) குறிப்பு பெயரெச்சம் ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்
இ) முற்றெச்சம் ஈ) வினைமுற்று - ஒரு வினைமுற்று எச்சப்பொருன் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது __
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம்
இ) முற்றெச்சம் ஈ) வினைமுற்று - ழுற்றெச்சத்திற்கான எடுத்துக்காட்டினைத் தேர்ந்தெடு
அ) படித்து வியந்தான் ஆ) வள்ளி படித்தாள்
இ) எழுதி வந்தான் ஈ) மெல்ல வந்தான் - கூற்றிணை ஆராய்க
1) செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்
2) ‘மெல்ல வந்தான்’ – தெரிநிலை வினையெச்சத்திற்தான எடுத்துக்காட்டு ஆகும.;
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - கூற்றிணை ஆராய்க
1) செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம்.
2) சிறிய கடிதம் – தெரிநிலைப் பெயரெச்சத்திற்கான எடுத்துகாட்டாகும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு - குறிப்பு பெயரெச்சத்திற்காக எடுத்துகாட்டை தேர்ந்தெடு
அ) சிறிய கடிதம் ஆ) எழுதிய கடிதம்
இ) எழுதி வந்தான் ஈ) மெல்ல வந்தான் - கீழ்காணும் சொற்களில் பெயரெச்சத்தை எழுதுக
அ) படித்து ஆ) எழுதி
இ) வந்து ஈ) பார்த்த - குறிப்பு வினையெச்சம் __
அ) காலத்தை ஆ) வினையை
இ) பண்பினை ஈ) பெயரை - தெரிநிலை வினையெச்சத்திற்கான எடுத்துக்காட்டனைத் தேர்ந்தெடு
அ) வள்ளி படித்தான் ஆ) படித்த மாணவன்
இ) மெல்ல வந்தான் ஈ) எழுதி வந்தான் - பொருத்துக
1) தெரிநிலைப் பெயரெச்சம் – படித்து முடித்தான்
2) தெரிநிலை வினையெச்சம் – பாடிய கவிதை
3) குறிப்புப் பெயரெச்சம் – மெல்ல வந்தான்
4) குறிப்பு வினையெச்சம் – பெரிய கடிதம்
அ) 1234 ஆ) 2143 இ) 3142 ஈ) 4123 - பாடம் படி’ – என்பது எந்த வினைமுற்றுக்கான எடுத்துக்காட்டு
அ) குறிப்பு வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - மாடு வயலில் புல்லை மேய்ந்மது – இத்தொடரிலுள்ள வினைமுற்று
அ) மாடு ஆ) வயல் இ) புல் ஈ) மேய்ந்தது - புவாது காய்க்கும் – என்பது எந்த எச்சத்திற்கான எடுத்துக்காட்டு
அ) பெயரெச்சம் ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்
இ) வினையெச்சம் ஈ) எதிர்மறை வினையெச்சம் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்கான எடுத்துகாட்டு அல்லாததைத் தேர்ந்தெடு
அ) அழியாவனப்பு ஆ) ஒழியாவனப்பு
இ) எழுதிய கடிதம் ஈ) சிந்தா மணி - பொருத்துக
1) ழூன்று காலங்களில் ஒன்றனை உணர்ர்த்துவது – பெயரெச்சம்
2) முக்காலத்தையும் உணர்த்துவது – வினைமுற்று
3) படித்தல், கற்பித்தல்,எழுதுதல் – வினையெச்சம்
4) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது – தொழிற் பெயர்
அ) 1423 ஆ) 4213 இ) 2341 ஈ) 3421 - ‘கூவா முன்னம் இளையோன் குறுகிநீ’ கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ) பெயரெச்சம்,வினையெச்சம் ஆ) பண்புத்தொகை,பெயரெச்சம்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,வினையெச்சம் ஈ) வினைமுற்று,வினையெச்சம் - தைத்திங்கள் என்பது __ பெயரைக் குறிக்கும்
அ) இடப்பெயர் ஆ) மாதப்பெயர்
இ) காலப்பெயர் ஈ) பொருட்பெயர் - தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக
அ) நோயின்றி வாழ்கிறான் ஆ) மெல்ல நடந்தான்
இ) நடந்து வந்தான் ஈ) நன்கு பாடினான் - அவன். பொன்னன் – எவ்வகைப் பெயர்
அ) பொருட்பெயர் ஆ) இடப்பெயர்
இ) காலப்பெயர் ஈ) தொழில் பெயர் - கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க
அ) வந்து தந்தான் ஆ) தைத்த சட்டை
இ) தங்கை கேட்டாள் ஈ) சென்று பார்த்தான் - உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக: வந்தான்
அ) வருவான் ஆ) வந்திலன்
இ) வருகிறான் ஈ) வருகின்றான் - வா – என்ற சொல்லின் பெயரெச்சம் குறிப்பிடு:
அ) வந்தான் ஆ) வந்திலன்
இ) வருதல் ஈ) வந்த - ‘சீதையைக் கண்டேன்’ – என்னும் தொடர்
அ) விளித் தொடர் ஆ) பெயரெச்சத் தொடர்
இ) வினை முற்றுத் தொடர் ஈ) உரிச் சொற்றெடர் - இடைச் சொல் கண்டறிக
அ) தவ ஆ) நடந்தான் இ) தாமரை ஈ)மற்று - “எயிறு’ – என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?
அ) திரிச்சொல் ஆ) இயற்சொல்
இ) வினைத்திரிச்சொல் ஈ) பெயர்த் திரிச்சொல் - வாரணம்,பௌம், பரவை,புணி என்பது __ யைக் குறிக்கும்
அ) சிங்கம் ஆ) கடல் இ) மாலை ஈ) சந்தனம் - பெயரெச்சத்தை எடுத்து எழுது
அ) படித்து ஆ) எழுதி இ) வந்த ஈ) நின்றான் - வா – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சசம்
அ) வந்தான் ஆ) வந்து இ) வருதல் ஈ) வந்த - ‘இல்லை’ – என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) எதிர்மறை பெயரெச்சம் இ) குறிப்பு வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று - பொருத்துக
1) குமரன் , தென்னை – இடப்பெயர்
2) காடு , மலை – காலப்பெயர்
3) பூ , காய் – பொருட்பெயர்
4) திங்கள் , வாரம் – சினைப்பெயர்
அ) 4132 ஆ) 3142 இ) 3421 ஈ) 2314 - பொருத்துக
1) உரிச் சொற்றெடர் – சூழ்குழல்
2) வினைத் தொகை – தழீஇய
3) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – தடக்கை
4) சொல்லிசை அளபெடை – கூவா
அ) 2134 ஆ) 3142 இ) 1324 ஈ) 4123 - ‘இனிய நண்பன்’ – இலக்கணக் குறிப்பு
அ) குறிப்புப் பெயரெச்சம் ஆ) தெரிநிலை பெயரெச்சம் இ) எதிர்மறைப்பெயரெச்சம் ஈ) குறிப்பு வினையெச்சம் - மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்கள் தேர்ந்தெடு
அ) கலம், தோணி, புணரி, மிதவை
ஆ) கலம், பரிசில், ஓடம், பரவை
இ) கலம், வங்கம், புணை, அம்பி
ஈ) கலம், பரிசில், ஆழி, பஃறி - ஒறுவேனில் – இலக்கணக் குறிப்பு யாது?
அ) வினைத்தொகை ஆ) உரிச்சொற்றெடர்
இ) பண்புத் தொகை ஈ) வினையெச்சம் - பொருத்துக
1) என்றல் – முற்றுமை
2) நுந்தை – குறிப்பு வினைமுற்று
3) யாவையும் – மருPவு
4) நன்று – தொழிற் பெயர்
அ) 4312 ஆ) 3421 இ) 2413 ஈ) 4321 - பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு
அ) பெற்றான் ஆ) பெற்றவன்
இ) பெற்று ஈ) பெற்றவர் - கொள்’ என்னும் வேர்ச் சொல்லின் வினைமுற்று
அ) கொண்டான் ஆ) கொள்க
இ) கொண்ட ஈ) கொண்டு - பொருத்துக
1) இடுகுறிப் பொதுப் பெயர் – மரங்கொத்தி
2) இடுகுறிச் சிறப்புப் பெயர் – பறவை
3) காரணப் பொதுப் பெயர் – காடு
4) காரணச் சிறப்புப் பெயர் – பனை
அ) 3421 ஆ) 2134 இ) 1324 ஈ) 4231 - பொருத்துக
1) தூறு – காரணச் சிறப்புப் பெயர்
2) மரம் – இடுகுறிப் பொதுப் பெயர்
3) வளையல் – புதர்
4) மலை – இடுகுறிப்பெயர்
அ) 3124 ஆ) 3412 இ) 2413 ஈ)1324 - ‘சேர்’ என்னும் வேர்ச் சொல்லின் பெயரெச்சம்
அ) சேர்ந்து ஆ) சேர்க
இ) சேர்ந்த ஈ) சேர்ந்தது - அவன் நல்லன் – எவ்வகைப் பெயர்
அ) இடப்பெயர் ஆ) காலப்பெயர்
இ) குணப்பெயர் ஈ) தொழில்பெயர் - ‘அவன் உழவன்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) தெரிநிலை வினைமுற்று ஆ) குறிப்பு வினைமுற்று இ) பெயர்ச் சொல் ஈ) தொழிற்பெயர் - 100+ சொல் இலக்கணம் வினா விடைகள் – TNPSC
விடைகள்:
- விடை: இ) 4
- விடை: இ) பள்ளி
- விடை: ஆ) உரிச்சொல்
- விடை: அ) இடைச்சொல்
- விடை: இ) திசைச்சொல்
- விடை: ஆ) வினைச் சொல்
- விடை: ஈ) வினைச்சொல் – நன்மை
- விடை: இ) மா
- விடை: அ) பெயர்ச் சொல்
- விடை: ஆ) 6
- விடை: இ) சினைப்பெயர்
- விடை: இ) ஆடுதல்
- விடை: இ) 3 மட்டும் தவறு
- விடை: அ) 2
- விடை: ஈ) கருவேலங்காடு
- விடை: அ) பறவை
- விடை: ஆ) வாழை
- விடை: ஆ) வளையல்
- விடை: அ) 2314
- விடை: இ) 3142
- விடை: அ) இயற்சொல்
- விடை: இ) சாற்றினான்
- விடை: ஆ) திரிச்சொல்
- விடை: ஆ) திரிச்சொல்
- விடை: இ) சமக்கிருதம்
- விடை: அ) 2
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஈ) சன்னல்
- விடை: ஆ) 2341
- விடை: இ) இரண்டும் சரி
- விடை: ஈ) மாதம்
- விடை: இ) பெயர்த் திரிச்சொல் – கடல்,கப்பல்
- விடை: அ) குங்குமம்
- விடை: ஆ) தொல்காப்பியர்
- விடை: இ) உம்
- விடை: ஈ) இது பழம் அன்று
- விடை: அ) எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது
- விடை: ஈ) அஆஇ ழூன்றும்
- விடை: இ) இரண்டும் சரி
- விடை: ஈ) 2ம் 3ம் சரி
- விடை: அ) மட்டும்
- விடை: ஆ) வினைமுற்று
- விடை: இ) இரண்டும் சரி
- விடை: அ) 2
- விடை: ஆ) தெரிநிலை வினைமுற்று
- விடை: அ) குறிப்பு வினைமுற்று
- விடை: ஆ) ஆதிரையான்
- விடை: இ) பொன்னன்
- விடை: ஆ) 2143
- விடை: இ) ஏவல் வினைமுற்று
- விடை: இ) வியங்கோள் வினைமுற்று ழூன்று இடங்களையும் காட்டாது.
- விடை: ஈ) ழூன்றும் சரி
- விடை: இ) ஏவல் வினைமுற்று
- விடை: ஈ) வியங்கோள் வினைமுற்று
- விடை: அ) தெரிநிலை வினைமுற்று
- விடை: இ) எச்சம்
- விடை: இ) பாடுகின்ற பாடல்
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்
- விடை: இ) முற்றெச்சம்
- விடை: ஆ) வள்ளி படித்தாள்
- விடை: அ) 1 மட்டும் சரி
- விடை: ஈ) இரண்டும் தவறு
- விடை: அ) சிறிய கடிதம்
- விடை: ஈ) பார்த்த
- விடை: அ) காலத்தை
- விடை: ஈ) எழுதி வந்தான்
- விடை: ஆ) 2143
- விடை: இ) ஏவல் வினைமுற்று
- விடை: ஈ) மேய்ந்தது
- விடை: ஈ) எதிர்மறை வினையெச்சம்
- விடை: இ) எழுதிய கடிதம்
- விடை: இ) 2341
- விடை: இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,வினையெச்சம்
- விடை: இ) காலப்பெயர்
- விடை: இ) நடந்து வந்தான்
- விடை: அ) பொருட்பெயர்
- விடை: ஆ) தைத்த சட்டை
- விடை: ஆ) வந்திலன்
- விடை: ஈ) வந்த
- விடை: இ) வினை முற்றுத் தொடர்
- விடை: ஈ)மற்று
- விடை: ஈ) பெயர்த் திரிச்சொல்
- விடை: ஆ) கடல்
- விடை: இ) வந்த
- விடை: ஆ) வந்து
- விடை: இ) குறிப்பு வினைமுற்று
- விடை: ஆ) 3142
- விடை: ஆ) 3142
- விடை: அ) குறிப்புப் பெயரெச்சம்
- விடை: இ) கலம், வங்கம், புணை, அம்பி
- விடை: ஆ) உரிச்சொற்றெடர்
- விடை: அ) 4312
- விடை: அ) பெற்றான்
- விடை: அ) கொண்டான்
- விடை: அ) 3421
- விடை: ஆ) 3412
- விடை: இ) சேர்ந்த
- விடை: இ) குணப்பெயர்
- விடை: ஆ) குறிப்பு வினைமுற்று