Sat. Aug 30th, 2025

எல்லைப் பாதுகாப்பு படையில் 1,121 காலிப்பணியிடங்கள், ரேடியோ ஆப்ரேட்டர் வேலை – 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் / 1,121 vacancies in Border Security Force, Radio Operator job – 12th class pass is enough

எல்லைப் பாதுகாப்பு படையில் 1,121 காலிப்பணியிடங்கள், ரேடியோ ஆப்ரேட்டர் வேலை – 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் / 1,121 vacancies in Border Security Force, Radio Operator job – 12th class pass is enough

மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லை பாதுகாப்பு படை செயல்படுகிறது. இதில் இருக்கும் பணியிடங்கள் எல்லை பாதுகாப்பு படையில் நேரடி நியமன்ம் மூலம் நிரப்பப்படுகிறது.

அந்த வகையில் 2025-ம் ஆண்டு இதனின் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

எல்லை பாதுகப்பு படையின் கம்யூனிகேஷன் பிரிவில் ரேடியோ அப்ரேட்டர் மற்றும் ரேடியோ மெக்கானிக் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 1,121 காலிப்பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ அப்ரேட்டர்)910
தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்)211
மொத்தம்1,121

இப்பணியிடங்கள் ஏற்கனவே பணியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவையுடன் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு
தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயதை நிரப்பி இருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக பொதுப் பிரிவினர் 25 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 28 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயது வரையும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நபர்களுக்கு தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

  • ரேடியோ அப்ரேட்டர் பிரிவு பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவை கொண்டு 60% மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வானொலி மற்றும் தொலைக்காட்சி/ எலெக்ட்ரிக் பொறியியல்/ கணினி ஆபரேட்டர் மற்றும் ப்ரோகிராமிங் அசிஸ்டண்ட்/ டேட்டா தயாரிப்பு மற்றும் கம்ப்யூட்டர் சப்ட்வேர்/ ஜென்ரல் எல்க்ட்ரிக் பொறியியல்/ டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகியவற்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றி இருக்க வேண்டும்.
  • ரேடியோ மெக்கானிக் பிரிவிற்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் கொண்டு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • ரேடியோ மற்றும் டிவி/ ஜென்ரல் எலெக்ட்ரானிக்ஸ், கணினி ஆப்ரேட்டர், ப்ரோகிராமிங் அசிஸ்டண்ட், டேட்டா தயாரிப்பு மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்/ எலெக்ட்ரிஷன்/ பிட்டர்/ தகவல் தொழில்நுட்பம்/ எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மெயிண்டனஸ்/ கம்யூனிகேஷன் கருவிகள் பாதுகாப்பு/ நெட்வொர் டெக்னீஷியன்/ கம்ப்யூட்டர் ஹார்ட்வர்/மெகாட்ரானிக்ஸ்/ டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகியவற்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 4 கீழ் மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு 3 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதல் கட்டத்தில் உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி அடைபவர்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

அதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, படிக்கும் எழுதும் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும். இவை அனைத்திற்கும் பிறகு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். ரேடியோ மெக்கானிக் பணிக்கு எழுதுதல், படித்தல் திறன் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
எல்லை பாதுகாப்பு படையில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் பெற்றுள்ளவர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விலக்கு இருப்பினும் ரூ.50 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 24 முதல் பெறப்பட தொடங்கிய நிலையில் செப்டம்பர் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்23.09.2025
உடற்தகுதித் தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்

தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதல் கட்டமாக உடற்தகுதித் தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியிடப்படும். தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு வெளியாகும். அதனை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *