Wed. Oct 15th, 2025

2 நாள் GST மற்றும் வரிவிலக்கு தாக்கல் குறித்த பயிற்சி – தமிழக அரசு / 2-day training on GST and tax exemption filing – Government of Tamil Nadu

2 நாள் GST மற்றும் வரிவிலக்கு தாக்கல் குறித்த பயிற்சி – தமிழக அரசு / 2-day training on GST and tax exemption filing – Government of Tamil Nadu

இரண்டு நாள் ‘GST’ மற்றும் வரிவிலக்கு தாக்கல் குறித்த பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII-TN), தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், சுயதொழிலாளர்கள் ஆகியோருக்கான வரி மற்றும் ஒழுங்குமுறை குறித்த பயிற்சியை வழங்கும் நோக்குடன், ‘GST’ மற்றும் வரிவிலக்கு தாக்கல் குறித்த பயிற்சி திட்டத்தை’ அறிவிக்கிறது.

தேதி: 20.08.2025 முதல் 21.08.2025 முடிய
இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32

இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கேற்பாளர்கள் பின்வரும் தலைப்புகளில் விரிவான பயிற்சியை பெறுவார்கள்:

GST (வரி சேவை வரி) அடிப்படை அறிமுகம் மற்றும் கட்டமைப்பு GST பதிவு செய்யும் நடைமுறை.

இன்வாய்ஸ் (விலைப்பட்டியல்) தயாரித்தல் மற்றும் தாக்கல் செயல்முறை. உள்ளீட்டு வரிச்சலுகை (Input Tax Credit – ITC) தொடர்பான விளக்கம் GST கட்டண செலுத்தும் முறை மற்றும் காலவரை முறை

GST தணிக்கை மற்றும் மதிப்பீட்டு செயல்முறை

ஒழுங்குமுறை நடைமுறைகள், அபராதங்கள் மற்றும் புகார்கள்

பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்:

நிதி சார்ந்த திறன்களை மேம்படுத்துதல்

மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவி திட்டங்கள், திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சந்தை அணுகல் போன்ற தொழில்முனைவோர் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டல்

பங்கேற்பதற்கான தகுதி: வணிக அல்லது தொழில் செயற்பாடுகளை புரிந்து கொள்ளும் அடிப்படைத் திறன் அவசியம்

கணினி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முன்னறிவு தேவையில்லை.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *