Wed. Oct 15th, 2025

சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை / 2418 Apprentice jobs in Central Railway Department

சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை / 2418 Apprentice jobs in Central Railway Department

மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு?

காலிப்பணியிடங்கள்

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Apprentices/அப்ரண்ட்டிஸ்1007
மொத்தம்1007

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறைகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்

வயது வரம்பு தளர்வு:

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்
  • முன்னாள் படைவீரர்களுக்கு அரசாங்க கொள்கையின்படி தளர்வு உண்டு.

சம்பள விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அப்ரண்ட்டிஸ் பயிற்சி விதிமுறைகளின்படி, மாதந்தோறும் ₹7,700 முதல் ₹8,050 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification): தகுதி பட்டியலில் இடம்பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
  • மருத்துவ உடற்தகுதி சோதனை (Medical Fitness Test): ஆவண சரிபார்ப்பில் தகுதி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு: தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் வட மாநிலங்களில் பணியமத்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்

எப்படி விண்ணப்பிப்பது:

சென்ட்ரல் ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.08.2025 முதல் 11.09.2025 தேதிக்குள் https://rrccr.etrpindia.com/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *