இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் 348 பணியிடங்கள் / 348 vacancies in India Post Payments Bank
காலியாக உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 348 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளம்: மாதம் ரூ. 30,000 வழங்கப்படும். வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2025
அதிகாரபூர்வ அறிவிப்பில் கல்வி தகுதி, பணியிடங்கள் உள்ளிட்டவற்றை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
அதிகார்பூர்வ அறிவிப்பை படிக்க: https://ippbonline.bank.in/documents/20133/133019/1759925784182.pdf

