Mon. Oct 13th, 2025

6 ஆம் வகுப்பு அறிவியல் / 6th Science – Study Materials (Book Back)

6 ஆம் வகுப்பு அறிவியல் / 6th Science – Study Materials (Book Back)

1. அளவீடுகள்

1) ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது

a) மீட்டர் அளவுகோல்

b) மீட்டர் கம்பி

c) பிளாஸ்டிக் அளவுகோல்

d) அளவுநாடா

2)  7மீ என்பது செ.மீ-ல்?

a) 70 செ.மீ

b) 7 செ.மீ

c) 700 செ.மீ

d) 7000 செ.மீ

3)  ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

a) இயல் அளவீடு

b) அளவீடு

c) அலகு

d) இயக்கம்

4) சரியனதை தேர்ந்தெடு

a) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ

b) கி.மீ > மி.மீ > செ.மீ> கி.மீ

c) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

d) கி.மீ > செ.மீ >மீ > மி.மீ

5)  அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை _________ இருக்க வேண்டும்

a) அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

b) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

புள்ளிக்கு வலது புறமாக

வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

6) பொருத்துக:-

1. முன்கையின் நீளம் – மீட்டர் .

2. நீளத்தின் 51 அலகு – விநாடி.

3. நானோ – 103.

4. காலத்தின் SI அலகு – 10-9.

5. கிலோ – முழம் .

a) 31524

b) 24315

c) 12354

d) 53214

2. விசையும் இயக்கமும்

1)வேகத்தின் அலகு__.

(a) மீ

(b) விநாடி

(c) கிலோகிராம்

(d) மீ / வி

2) கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம் ?

(a) பூமிதன் அச்சைப் பற்றிச் சுழலுதல்

(b) நிலவுபூமியைச் சுற்றிவருதல் .

(c) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம் .

(d) மேற்கண்ட அனைத்தும்

3) கிழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு:-

(a) வேகம் = தொலைவு X காலம் .

(b) வேகம் = தொலைவு/காலம் .

(c) வேகம் = காலம் / தொலைவு.

(d) வேகம் = 1 / (தொலைவு X காலம் ).

4) கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள் . அங்குசெல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள் .

கூற்று 1: கீதாவின் வேகம் 1 கி.மீ/நிமிடம் .

கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி.

(a) கூற்று 1 மட்டும் சரி

(b) கூற்று 2 மட்டும் சரி

(c) இரண்டும் கூற்றுமே சரி

(d) இரண்டு கூற்றுகளும் தவறு

3. அலகு

1) ______என்பது பருப்பொருளால் ஆனது அல்ல.

(a) தங்கமோதிரம்

(b) இரும்பு ஆணி

(c) ஒளி

(d) எண்ணெய்த் துளி

2) 400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன் ?

(a) 400 மி.லி

(b) 600 மி.லி

(c) 200மி.லி

(d) 800மி.லி

3) தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை__________ முறையில் நீக்கலாம் ?

(a) கைகளால் தெரிந்தெடுத்தல்

(b) வடிகட்டுதல்

(c) காந்தப் பிரிப்பு

(d) தெளியவைத்து இறுத்தல்

4) அரிசிமற்றும் பருப்புகளில் கலந்துள்ளலேசானமாசுப் பொருள்களை ____முறையில் நீக்கலாம் ?

(a) வடிகட்டுதல்

(b) வண்டலாக்குதல்

(c) தெளியவைத்து இறுத்தல்

(d) புடைத்தல்

5) தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது

(a) மழை

(b) மண்

(c) நீர்

(d) காற்று

6) ____ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால்

பிரித்தெடுக்கலாம் ?

(a) திடப்பொருள் -திடப்பொருள்

(b) திடப்பொருள் -நீர்மம்

(c) நீரமம் -நீர்மம்

(d) நீரமம் -வாயு

7) பின்வருவனவற்றுள் எதுகலவைஅல்ல?

(a) பாலுடன் காபி

(b) எலுமிச்சை ஜீஸ்

(c) நீர்

(d) கொட்டைகள் புதைத்த ஜஸ்கீரிம் .

8) பொருத்துக:-

1. எளிதில் உடையக்கூடியது

(நொறுங்கும் தன்மை) – உலோகத்தட்டு.

2. எளிதில் வளையக்கூடியது – ரப்பர்வளையம் .

3. எளிதில் இழுக்கலாம் – பருத்தி,கம்பளி.

4. எளிதில் அழுத்தலாம் – மண் பானை.

5. எளிதில் வெப்பமடையும் – நெகிழிஒயர் (Wire).

(a) 45231

(b) 32514

(c) 12435

(d) 52143

4. தாவரங்கள் வாழும் உலகம்

1)  குளம் _________ வாழிடத்திற்கு உதாரணம்

(a)கடல்

(b) நன்னீர் வாழிடம்

(c) பாலைவனம்

(d) மலைகள்

2) இலைத் துளையின் முக்கிய வேலை _________

(a)நீரைக் கடத்துதல்

(b) நீராவிப் பாேக்கு

(c) ஒளிச்சேர்க்கை

(d) உறிஞ்சுதல்

3) நீரை உறிஞ்சும் பகுதி _________ ஆகும்.

(a) வேர்

(b)தண்டு

(c) இலை

(d) பூ

4) நீர் வாழ் தாவரங்களின் வாழிடம் _________ 

(a) நீர்

(b)நிலம்

(c) பாலைவனம்

(d) மலை

5) பொருத்துக:-

மலைகள் – ஒருவித்திலைத் தாவரங்கள் .

1) மலைகள் – ஒருவித்திலைத் தாவரங்கள்

2) பாலைவனம் – இமயமலை

3) ஒளிச்சேர்க்கை – வறண்ட இடங்கள் .

4) சல்லிவேர்த் தொகுப்பு – இலைகள்

(a) 2341

(b) 2431

(c) 1234

(d) 4321

5. உடல் நலமும், சுகாதாரமும்

1) நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

(a) கார்போஹைட்ரேட்  

(b) கொழுப்பு

(c) புரதம்  

(d) நீர்

2) ஸ்கர்வி குறைபாட்டினால் உண்டாகிறது.

(a) வைட்டமின் A  

(b) வைட்டமின் B

(c) வைட்டமின் C  

(d) வைட்டமின் D

3) கால்சியம் ____________வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

(a) கார்போஹைட்ரேட்

(b) கொழுப்பு

(c) புரதம்

(d) தாது உப்புகள்

4) நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில்  ____________.

(a) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

(b) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது

(c) அவற்றில் அதிக வைட்டமின்களும்  தாது உப்புகளும் உள்ளன

(d) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது

5) பாக்டீரியா, ஒரு சிறிய ____________நுண்ணுயிரி.

(a) புரோகேரியோட்டிக்

(b) யூகேரியோட்டிக்

(c) புரோட்டோசோவா

(d) செல்களற்ற

6) பொருத்துக:-

1. வைட்டமின் A – ரிக்கெட்ஸ் .

2. வைட்டமின் B – மாலைக் கண் நோய் .

3. வைட்டமின் C – மலட்டுத் தன்மை.

4. வைட்டமின் D – பெரிபெரி.

5. வைட்டமின் E – ஸ்கர்வி.

(a) 24513

(b) 32514

(c) 12435

(d) 52143

6. கணினி ஓர் அறிமுகம்

1) கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

a) மார்ட்டின் லூதர் கிங்

b) கிரகாம்பெல்

c) சார்லி சாப்ளின்

d) சார்லஸ் பாபேஜ்

2) முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

a) 1980 

b) 1947 

c) 1946 

d) 1985

3) கணினியின் முதல் நிரலர் யார்?

a) லேடி வில்லிங்டன்

b) அகஸ்டா அடாலவ்லேஸ்

c) மேரி க்யூரி     

d) மேரிக்கோம்

4) பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

a) கணிப்பான்  

b) அபாகஸ்

c) மின் அட்டை  

d) மடிக்கணினி

5) பொருத்துக:-

1. முதல் தலைமுறை -செயற்கைநுண்ணறிவு.

2. இரண்டாம் தலைமுறை -ஒருங்கிணைந்தசுற்று.

3. மூன்றாம் தலைமுறை -வெற்றிடக் குழாய்கள்

4. நான்காம் தலைமுறை -மின்மயப் பெருக்கி.

5. ஐந்தாம் தலைமுறை -நுண்செயலி.

(a)34251

(b)32514

(c)12435

(d)52143

6th II TERM: 1. வெப்பம்

1) ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள்

a) வேகமாக நகரத் தொடங்கும் 

b) ஆற்றலை இழக்கும்

c) கடினமாக மாறும்

d) லேசாக மாறும்

2) வெப்பத்தின் அலகு

a) நியூட்டன்

b) ஜூல்

c) வோல்ட்

d) செல்சியஸ்

3) 30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச்சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை 

a) 80°C

b) 50°C க்கு மேல் 80°C

c) 20°C

d) ஏறக்குறைய 40°C

4) 50°C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது

a) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

b) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

c) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

d) இரண்டின் வெப்பநிலை உயரும்

5) பொருத்துக:-

1. வெப்பம் – 0°C.

2. வெப்பநிலை – 100°C.

3. வெப்பச்சமநிலை – கெல்வின் .

4. பனிக்கட்டி – வெப்பம் பரிமாற்றம் இல்லை.

5. கொதிநீர் – ஜீல் .

(a)53412

(b)32514

(c)12435

(d)52143

2. மின்னியல்

1) வேதி ஆற்றலை மின்னாற்றைலாக மாற்றும் சாதனம்

(a)மின் விசிறி

(b)சூரிய மின்கலன்

(c)மின்கலன்

(d)தொலைக்காட்சி

2) மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

(a)மின்மாற்றி

(b)மின் உற்பத்தி நிலையம்

(c)மின்சாரக் கம்பி

(d)தொலைக்காட்சி

3)கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

(a)வெள்ளி

(b)மரம்

(c)அழிப்பபான்

(d)நெகிழி

3. நம்மைச் சுற்றிநிகழும் மாற்றங்கள்

1) பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம் ___ஆ கும் .

(a) இடமாற்றம்

(b) நிறமாற்றம்

(c) நிலைமாற்றம்

(d) இயைபுமாற்றம்

2) ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம்____ஆகும் .

(a) வேதியியல் மாற்றம்

(b) விரும்பத்தகாதமாற்றம்

(c) மீளாமாற்றம்

(d) இயற்பியல் மாற்றம்

3) பால் தயிராக மாறுவது ஒரு__ _ ஆகும் .

(a) மீள் மாற்றம்

(b) வேகமானமாற்றம்

(c) மீளாமாற்றம்

(d) விரும்பத்தகாதமாற்றம்

4) கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

(a) துருப்பிடித்தல்

(b) பருவநிலைமாற்றம்

(c) நிலஅதிர்வு

(d) வெள்ளப்பெருக்கு

5) காற்றுமாசுபாடு, அமிலமழைக்கு வழிவகுக்கும் , இது ஒரு  ___ ஆகும் .

(a) மீள் மாற்றம்

(b) வேகமான மாற்றம்

(c) இயற்கையான மாற்றம்

(d) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

4. காற்று

1) காற்றில் நைட்ரஜனின் சதவீதம் ____ ?

(a) 78%

(b) 21%

(c) 0.03%

(d) 1%

2) தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் __ ஆகும் .

(a) இலைத்துளை

(b) பச்சையம்

(c) இலைகள்

(d) மலர்கள்

3) காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி__ ஆகும் .

(a) நைட்ரஜன்

(b) கார்பன் -டை-ஆக்ஸைடு

(c) ஆக்சிஜன்

(d) நீராவி

4) உணவுபதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் .

(a) உணவிற்கு நிறம் அளிக்கிறது

(b) உணவிற்கு சுவை அளிக்கிறது

(c) உணவிற்கு புரதத்தையும் , தாது உப்புகளையும் அளிக்கிறது.

(d) உணவுப் பொருளைபுதியதாகவே இருக்கும்படிசெய்கின்றது.

5) காற்றில் உள்ள மற்றும் வாயுக்களின் கூடுதல் காற்றின் 99%

இயைபாகிறது.

1. நைட்ரஜன்

2. கார்பன் டை-ஆக்ஸைடு

3. மந்தவாயுக்கள்

4. ஆக்சிஜன்

(a) 1மற்றும் 2

(b) 1மற்றும் 3

(c) 2 மற்றும் 4

(d) 1மற்றும் 4

6) பொருத்துக:-

1. இயங்கும் காற்று – அடிவளிமண்டலம் .

2. நாம் வாழும் அடுக்கு – ஒளிச்சேர்க்கை.

3. வளிமண்டலம் – தென்றல் காற்று.

4. ஆக்சிஜன் B ஓசோன் படலம் .

5. கார்பன் -டை-ஆக்ஸைடு – எரிதல்

(a)31452

(b)32514

(c)12435

(d)52143

5. செல்

1) செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?

(a) சென்டிமீட்டர்

(b) மில்லிமீட்டர்

(c) மைக்ரோமீட்டர்

(d) மீட்டர்

2) நுண்ணோக்கியில் , பிரியா செல்லைப் பார்க்கும்போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல் ?

(a) தாவரசெல்

(b) விலங்குசெல்

(c) நரம்புசெல்

(d) பாக்டீரியா செல்

3) யூகேரியோட்டின் கட்டுப்பாட்டுமையம் எனப்படுவது?

(a) செல் சுவர்

(b) நியூக்ளியஸ்

(c) நுண்குமிழிகள்

(d) பசுங்கணிகம்

4) கீழேஉள்ளவற்றில் எது ஒருசெல் உயிரினம் அல்ல?

(a) ஈஸ்ட்

(b) அமீபா

(c) ஸ்பைரோகைரா

(d) பாக்டீரியா

5) யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம் ?

(a) செல்சுவர்

(b) சைட்டோபிளாசம்

(c) உட்கரு (நியூக்ளியஸ் )

(d) நுண்குமிழிகள்

6) பொருத்துக:-

1. கட்டுப்பாட்டுமையம் – செல் சவ்வு.

2. சேமிப்புகிடங்கு – மைட்டோகாண்ட்ரியா.

3. உட்கருவாயில் – நியூக்ளியஸ் (உட்கரு).

4. ஆற்றல் உற்பத்தியாளர் – உட்கருஉறை.

5. செல்வின் வாயில் – நுண்குமிழ்கள் .

(a)35421

(b)32514

(912435

(d)52143

6. மனித உறுப்புகளின் மண்டலங்கள்

1) மனிதனின் இரத்த ஓட்டமண்டலம் கடத்தும் பொருள்கள் _

(a) ஆக்சிஜன்

(b) சத்துப் பொருள்கள்

(c) ஹார்மோன்கள்

(d) இவைஅனைத்தும்

2) மனிதனின் முதன்மையான சுவாச-உறுப்பு__

(a) இரைப்பை

(b) மண்ணீரல்

(c) இதயம்

(d) நுரையீரல்கள்

3) நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக

மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது?

(a) தசைச் சுருக்கம்

(b) சுவாசம்

(c)செரிமானம்

(d) கழிவுநீக்கம்

4) பொருத்துக:-

1. காது – இதயத் தசை.

2. எலும்புமண்டலம் – தட்டையானதசை.

3. உதரவிதானம் – ஒலி.

4. இதயம் – நுண் காற்றுப்பைகள் .

5. நுரையீரல்கள் – உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றது.

Codes:

(a) 35214

(b) 32514

(c) 12435

(d) 52143

7. கணினியின் பாகங்கள்

1) உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

(a) சுட்டி

(b) விசைப்பலகை

(c) ஒலிபெருக்கி

(d) விரலி

2) மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

(a) ஈதர்வலை (Ethernet)

(b) வி.ஜி.ஏ. (VGA)

(c) எச்.டி.எம்.ஐ. (HDMI)

(d) யு.எஸ்.பி. (USB)

3)கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

(a) ஒலிபெருக்கி

(b) சுட்டி

(c) திரையகம்

(d) அச்சுப்பொறி

4) கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

(a) ஊடலை

(b) மின்னலை

(c) வி.ஜி.ஏ. (VGA)

(d) யு.எஸ்.பி. (USB)

5) விரலி ஒரு ———————– ஆக பயன்படுகிறது.

(a) வெளியீட்டுக்கருவி

(b) உள்ளீட்டுக்கருவி

(c) சேமிப்புக்கருவி

(d) இணைப்புக்கம்பி

6) பொருத்துக

1. காணொளிப் பட வரிசை (VGA) – உள்ளீட்டுக்  கருவி

2. அருகலை – இணைப்புவடம்

3. அச்சுப்பொறி – எல்.இடி. (LED) தொலைக்காட்சி

4. விசைப்பலகை – கம்பி இல்லா இணைப்பு

5. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI) – வெளியீட்டுக்கருவி

(a)25413

(b)32514

(c)12435

(d)52143

6TH II TERM: 1. காந்தவியல்

1) காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

(a) மரக்கட்டை

(b) ஊசி

(c) அழிப்பான்

(d) காகிதத்துண்டு

2) மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

(a) இந்தியர்கள்

(b) ஐரோப்பியர்கள்

(c) சீனர்கள்

(d) எகிப்தியர்கள்

3) தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ———– திசையில்தான் நிற்கும்

(a) வடக்கு-கிழக்கு

(b) தெற்கு-மேற்கு

(c) கிழக்கு-மேற்கு

(d) வடக்கு-தெற்கு

4) காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

(a) பயன்படுத்தப்படுவதால்

(b) பாதுகாப்பாக வைத்திருப்பதால்

(c) சுத்தியால் தட்டுவதால்

(d) சுத்தப்படுத்துவதால்

5) காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி —————- அறிந்து கொள்ளமுடியும்.

(a) வேகத்தை

(b) கடந்த தொலைவை

(c) திசையை

(d) இயக்கத்தை

6) பொருத்துக:-

1. காந்ததிசைகாட்டி – அதிககாந்தவலிமை.

2. ஈர்ப்பு – ஒத்ததுருவங்கள் .

3. விலக்குதல் – எதிரெதில் துருவங்கள்

4. காந்ததுருவங்கள் – காந்தஊசி.

(a)4321

(b)2431

(c)1234

(d)3241

2. நீர்

1) உலகில் உள்ள மொத்த நீரில் 97% —————— ஆகும்.

a) நன்னீர்

(b) தூயநீர்

(c) உப்பு நீர்

(d) மாசடைந்த நீர்

2) பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

a) ஆவியாதல்

(b) ஆவி சுருங்குதல்

(c) மழை பொழிதல்

(d) காய்ச்சி வடித்தல்

3) பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

|. நீராவிப்போக்கு

II. மழைபொழிதல்

III. ஆவி சுருங்குதல்

IV.ஆவியாதல்

a) II மற்றும் III

(b) II மற்றும் IV

(c) I மற்றும் IV

(d) | மற்றும் ||

4) நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

a) பனி ஆறுகள்

(b) நிலத்தடி நீர்

(c) மற்ற நீர் ஆதாரங்கள்

(d) மேற்பரப்பு நீர்

5) வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

a) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

(b) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

(c) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

(d) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

6) பொருத்துக:-

1. வெள்ளம் – ஏரிகள்

2. மேற்பரப்புநீர் – ஆவியாதல் .

3. சூரியஒளி – நீராவி.

4. மேகங்கள் – துருவங்கள் .

5. உறைந்தநீர் – அதிகளவுமழை.

(a)51234

(b)32514

(c)12435

(d)52143

3. அன்றாடவாழ்வில் வேதியியல்

1) சோப்புக்களின் முதன்மை மூலம் —————— ஆகும்.

(a)புரதங்கள்

(b) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

(c)  மண்

(d) நுரை உருவாக்கி

2) வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு —————- கரைசல் பயன்படுகிறது.

(a)அம்மோனியம் ஹைட்ராக்சைடு

(b) சோடியம் ஹைட்ராக்சைடு

(c) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

(d) சோடியம் குளோரைடு

3) சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் —————- ஆகும்.

(a)விரைவாக கெட்டித்தன்மையடைய

(b) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

(c) கடினமாக்க

(d) கலவையை உருவாக்க

4) பீனால் என்பது ————————

(a) கார்பாலிக் அமிலம்

(b) அசிட்டிக் அமிலம்

(c) பென்சோயிக் அமிலம்

(d) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

5) இயற்கை ஒட்டும்பொருள் ——————– இருந்து தயாரிக்கப்படுகின்றது

(a)புரதங்களில்

(b) கொழுப்புகளில்

(c)  ஸ்டார்ச்சில்

(d) வைட்டமின்களில்

6) பொருத்துக:-

1. சோப்பு – C6H6OH.

2. சிமெண்ட் – CaSo4,2H2O.

3. உரங்கள் – NaOH.

4. ஜிப்சம் – RCC.

5. பீனால் – NPK.

(a) 34512

(b) 32514

(c) 12435

(d) 52143

4. நமது சுற்றுச்சூழல்

1) நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக

(a)குளம்

(b) ஏரி

(c) நதி

(d) இவை அனைத்தும்.

2) உற்பத்தியாளர்கள் எனப்படுபவை

(a)விலங்குகள்

(b) பறவைகள்

(c) தாவரங்கள்

(d) பாம்புகள்

3) உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

(a)நெகிழி

(b) தேங்காய் ஒடு

(c) கண்ணாடி

(d) அலுமினியம்

4) காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

(a)மறுசுழற்சி

(b) மீண்டும் பயன்படுத்துதல்

(c) மாசுபாடு

(d) பயன்பாட்டைக் குறைத்தல்

5) களைக்கொல்லிகளின் பயன்பாடு ————– மாசுபாட்டை உருவாக்கும்

(a)காற்று மாசுபாடு

(b) நீர் மாசுபாடு

(c) இரைச்சல் மாசுபாடு

(d)  இவற்றில் எதுவும் இல்லை

6) பொருத்துக:-

1. உயிரினக் கூறுகள் – நிலவாழ் சூழ்நிலைமண்டலம் .

2. சாக்கடைக் கழிவுகள் – நிலமாசுபாடு.

3. செயற்கைஉரங்கள் – காற்றுமாசுபாடு.

4. பாலைவனம் – நீர்மாசுபாடு.

5. புகை – விலங்குகள்

(a)54213

(b)32514

(c)12435

(d)52143

5. அன்றாட வாழ்வில் தாவரங்கள்

1) தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

a)வாத்து

b). கிளி

c)ஓசனிச்சிட்டு

d) புறா

2) இயற்கையான கொசு விரட்டி

a)ஜாதிக்காய்

b) மூங்கல்

c) இஞ்சி

d) வேம்பு

3) பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

a)உருளைக்கிழங்கு

b) கேரட்

c)முள்ளங்கி

d) டர்னிப்

4) பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

a)நெல்லி

b). துளசி

c)மஞ்சள்

d) சோற்றுக் கற்றாழை

5) இந்தியாவின் தேசிய மரம் எது?

a)வேப்பமரம்

b) பலா மரம்

c)ஆலமரம்

d) மாமரம்

6) பொருத்துக:-

1. நார்தரும் தாவரம் – கிருமிநாசினி.

2. வன்கட்டை – சணல் .

3. வேம்பு – நறுமணப் பொருள் .

4. ஏலக்காய் – தானியம் .

5. கம்பு – தேக்கு.

a) 25134

b) 32514

c) 12435

d) 52143

6. வன்பொருளும் மென்பொருளும்

1) மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

(a)தாய்ப்பலகை

(b)SMPS

(c) RAM

(d) MOUSE

2) கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

(a)இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

(b) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

(c)இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

(d)இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

3) LINUX என்பது

(a)கட்டண மென்பொருள்

(b)தனி உரிமை மென்பொருள்

(c)கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

(d) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

4) கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

(a)WINDOWS

(b)MAC OS

(c)Adobe Photoshop

(d) இவை அனைத்தும்

5) ——————— என்பது ஒரு இயங்குதளமாகும்.

(a)ANDROID

(b)Chrome

(c) Internet

(d)Pendrive

6) II. பொருத்துக

1. MAC OS – இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்

2 Software – கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்

3. Hardware – உள்ளீட்டு கருவி

4. Keyboard – RAM

5. LINUX – Geogebra

(a)15432

(b)32514

(c)12435

(d)52143

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *