POWERGRID ஆணையத்தில் 73 காலிப்பணியிடங்ள்
POWERGRID ஆனது Officer Trainee(Environmental, Social and HR) பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
POWERGRID காலிப்பணியிடங்கள்:
POWERGRID ஆணையத்தில் உள்ள Officer Trainee(Environmental, Social and HR) பதவிகளுக்கான 73 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Document Verification, Behavioral Assessment, Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் POWERGRID இணையதளமான https://www.powergrid.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.