பண்டிகை தினத்தை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் –புக்கிங் துவக்கம்
இந்தியாவில் பொதுவாக பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக கூடுதல் ரயில் சேவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை நவம்பர் மாத இறுதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலாவதாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இரவு 8:45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் அக்.16, 23, 20 மற்றும் நவ.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கூடுதலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இரவு 9:10 மணிக்கு புறப்படும் ரயில் அக்.11, 18, 25, நவ.1, 8, 15, 22, 29 மற்றும் டிச.1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஆமதாபாத்த்தில் இருந்து திருச்சிக்கு காலை 9:30 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் அக்.12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு காலை 5:40 மணிக்கு புறப்படும் வாரந்திர ரயில் அக். 8, 15, 22, 29ம் நவ.5, 12, 19, 26, டிச.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை இன்று முதல் புக் செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.