Tamilnadu: தமிழக மக்களுக்கு ரூ. 6000 வெள்ள நிவாரணம் நாளை முதல் விநியோகம்
தமிழகத்தில் கடந்த 17, 18 ஆம் தேதி தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த சேதாரம் ஏற்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி ஆய்வு செய்தார்.
அதன் பின் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணம் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதே போல லேசான பாதிப்பு உள்ள வட்டங்கள் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு அறிவிப்பின் படி நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட இருக்கிறது. இந்த நிவாரணத் தொகை நாளை (டிச. 29) முதல் வழங்கப்பட இருக்கிறது.