அறிவு சார் மையத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கான, பயிற்சி
அறிவு சார் மையத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கான, பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.மேட்டுப்பாளையம் மணி நகரில், நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் உள்ளது. இங்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ரயில்வே பணிகளுக்கும், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கும், விரைவில் தேர்வு நடைபெற உள்ளது. போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த, மணிநகரில் உள்ள, நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில்,மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. எனவே இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர், மணி நகரில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.