Sun. Jul 27th, 2025

ரயில் பயணச்சீட்டு விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – Madurai

ரயில் பயணச்சீட்டு விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – Madurai

மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலமான பயணச் சீட்டு விற்பனை உதவியாளா் பணிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமான பயணச் சீட்டு விற்பனையாளா்களாக இதுவரை, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா்கள் மட்டும் நியமிக்கப்பட்டனா். தற்போது, பொதுமக்களுக்கும் இந்தப் பணி வாய்ப்புக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தானியங்கி இயந்திரம் மூலம் ஒரு உதவியாளா் விற்பனை செய்யும் பயணச் சீட்டுகளின் மொத்த மதிப்பில் 3 சதவீதத் தொகை அவருக்கு வழங்கப்படும். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவா்கள் ஓராண்டு காலம் பணியாற்றலாம்.

தற்போது, திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகா், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூா், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூா், தூத்துக்குடி, போடிநாயக்கனூா், புனலூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தானியங்கி இயந்திர பயணச்சீட்டு விற்பனை உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பம் உள்ளவா்கள் httpd://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, (11.06.2024) ஜூன் 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *