SBI யில் அடுத்த 2 ஆண்டுகளில் 8000 பணியிடங்கள்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு கூடுதலாகவே உள்ளனர்.
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி புதிதாக 400 கிளைகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக புதிய கிளைக்கு தேவையான அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவது போன்றவற்றால் 6000 முதல் 8000 வேலை வாய்ப்புகள் உருவாகலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.