You are currently viewing UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தடையே இந்த நிதி தான். புதிதாக தொழில் தொடங்குவபர்களுக்கு வங்கியோ அல்லது வெளியிலேயோ கடன் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.

இதனால் தான் வேலையில்லாதவர்களுக்கு தொழில் ரீதியாக கடன்கள் வழங்க வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். திட்டத்தில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

திட்டம்: வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கிட, தற்போதைய திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான மானியமும் ரூ.1.25 லட்சத்திலிருந்து, ரூ.3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. UYEGP திட்டத்தின் கீழ், இளம் தொழில்முனைவோர் ரூ. 25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 15% மானியத்தில், தனிநபர்கள் தங்கள் வணிகத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறவும் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கப்படுகிறது. UYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதி (Eligibility):

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 35 வயதாக இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 1,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.
கடன் பெற விரும்பும் நபர் வேறு எந்த கடன் திட்டத்திலும், மானியத்திலும் பயனாளியாக இருக்க கூடாது.
திட்ட செலவுகள் அந்தந்த வரையறைக்குள் இருக்க வேண்டும்.

Leave a Reply