தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தில் நெட்டி வேலைப்பாடு மற்றும் தலையாட்டி பொம்மை செய்தல் தொடா்பாக ஒரு மாத காலப் பயிற்சி பெற மாணவா்கள் சோக்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.