இன்றைய தலைப்பு செய்திகள் (Headline News)

இன்றைய தலைப்பு செய்திகள் (Headline News) (06-08-2025)
இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை… ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அறிவிப்பு…
வர்த்தகத்தில் இந்தியா நல்ல கூட்டாளியாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டம்… உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவுவதாகவும் குற்றச்சாட்டு…
டிரம்பின் அறிவிப்புக்கு, அவரின் சொந்த கட்சியிலேயே உள்ள, நிக்கி ஹேலே கடும் எதிர்ப்பு.. எதிரி நாடான சீனாவை விட்டுவிட்டு, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுடனான உறவை தீயிட்டு எரிப்பதா என காட்டம்…
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி மிரட்டல் சட்டவிரோதமானது என ரஷ்யா அறிக்கை… நாட்டின் நலனுக்காக, தங்களது வர்த்தக கூட்டாளிகளை தேர்வு செய்ய உரிமை உள்ளதாக கருத்து..
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு… உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ஷ்ய அதிபர் புதினை இன்று சந்திக்கிறார் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப்…
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு… கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம், குடியிருப்புகளை வாரிச் சுருட்டிய பகீர் காட்சி…
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கீர் கங்கா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு…தாராலியில் குடியிருப்பை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் , பலர் சிக்கி இருக்கலாம் என தகவல்…
உத்தர்காசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்… பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்பதாக பதிவு…