You are currently viewing வேலையில்லா இளைஞர்கள் YOUTUBE மூலமாக சம்பாதிக்க ஏற்பாடு -தமிழக அரசின் அறிவிப்பு

வேலையில்லா இளைஞர்கள் YOUTUBE மூலமாக சம்பாதிக்க ஏற்பாடு -தமிழக அரசின் அறிவிப்பு

வேலையில்லா இளைஞர்கள் YOUTUBE மூலமாக சம்பாதிக்க ஏற்பாடு -தமிழக அரசின் அறிவிப்பு

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த யூடியூப்-ல் சேனல் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் விதமாக “யூடியூப் சேனலை எப்படி உருவாக்குவது ” என்பதற்கான பயிற்சி வகுப்புகளை அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடத்தவுள்ளது இந்த பயிற்சி வகுப்பில் விண்ணப்பிக்க நினைப்பவர் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், இத்தகைய முயற்சிகள் மூலம் தமிழக இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply