IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை – 344 காலிப்பணியிடங்கள்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive பணிக்கென காலியாக உள்ள 344 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Executive பணிக்கென காலியாக உள்ள 344 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆன்லைன் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.10.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.