NLC ஆணையத்தில் 803 காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

NLC ஆணையத்தில் 803 காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Apprentices Training பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 803 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentices Training பணிக்கென காலியாக உள்ள 803 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

14 வயது பூர்த்தியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8766/- முதல் ரூ.10,019/- (உதவித்தொகை) மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Leave a Reply