You are currently viewing ITBP எல்லைக் காவல் படையில் Constable வேலை – 540+ காலிப்பணியிடங்கள்

ITBP எல்லைக் காவல் படையில் Constable வேலை – 540+ காலிப்பணியிடங்கள்

ITBP எல்லைக் காவல் படையில் Constable வேலை – 540+ காலிப்பணியிடங்கள்

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆனது Constable (Driver) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 545 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Constable (Driver) பணிக்கென காலியாக உள்ள 545 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Heavy Vehicle Driving License வைத்திருப்பது கட்டாயம்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தகுதியானவர்கள்  Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) மற்றும் எழுத்து தேர்வின் மூலம்  தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Leave a Reply