Sun. Aug 31st, 2025

TNPSC குரூப் 4 தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

TNPSC குரூப் 4 தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கிராம அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் முதலிய 9,491 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு TNPSC குரூப் 4 தேர்வு, கடந்த மாதம் ஜூன் 9ம்  தேதியன்று   நடைபெற்றதை தொடர்ந்து, அதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, தற்போது  குரூப் 4 தேர்வாளர்களுக்கு   “மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை” போன்றவற்றின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட  தேர்வாளர்கள்  பட்டியலை  TNPSC ஆணையம், அதன் இணையதளத்தில் நேற்று(07.11.2024) வெளியிட்டுள்ளது. மேலும், நேற்று வெளியிடப்பட்ட பட்டியலிலுள்ள தேர்வாளர்களுக்கு  கணினி விழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு (On-screen Certificate Verification) நாளை(09.11.2024) முதல் 21.11.2024 வரை நடைபெறும் எனவும், இதற்கான One Time Registration பிளாட்பார்ம்  TNPSC இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என்று TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *