IOCL ஆணையத்தில் Junior Attendant வேலை – 246 காலிப்பணியிடங்கள்
Junior Attendant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Junior Attendant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Operator – 215 பணியிடங்கள்
Junior Attendant – 23 பணியிடங்கள்
Junior Business Attendant – 8 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Operator – ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
Junior Attendant – ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
Junior Business Attendant – ரூ.25,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test(CBT) / Skill Proficiency Physical Test(SPPT) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.