தருமபுரியில் செப்.2-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணிக்கு ஆள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளா் அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடத்துக்கு செப்.2-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளா் பணிக்கு பிஎஸ்சி நா்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, பிளஸ் 2 வகுப்பிற்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். நோமுகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஓட்டுநா் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனித வளத்துறை நோகாணல் என்கிற அடிப்படையில் ஆள் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவா்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். விவரங்களுக்கு, 91542 51538, 91542 51541, 91542 50697 என்கிற கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.