Thu. Jul 10th, 2025

IBPS SO தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு

IBPS SO தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சமீபத்தில் Specialist Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் 896 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் Specialist Officer பணிக்கான முதல் கட்ட தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு முதன்மை தேர்வானது 14.12.2024ம் தேதி அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 07.02.2025ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது IBPS ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் Scorecard வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு செல்லவும்.
பின் CRP-SPL-XIV Mains Score Card 2025 என்பதை கிளிக் செய்யவும்.
அது புதிய login page-க்கு அழைத்து செல்லும்.
விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்படும் registration number or roll number மற்றும் birth/password பூர்த்தி செய்து Admit Card பெற்றுக்கொள்ளலாம்.
பின் Download என்பதை கிளிக் செய்து Download செய்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Join our-WhatsApp Group for Daily Updates