You are currently viewing DRDO Internship 2025 அறிவிப்பு  வெளியானது

DRDO Internship 2025 அறிவிப்பு  வெளியானது

DRDO Internship 2025 அறிவிப்பு  வெளியானது

“பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) என்பது இந்திய ஆயுதப் படைகளுக்குத் தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கும் ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி  மையமாகும்”. மேலும், இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (TDEs), தொழில்நுட்ப மேம்பாடு உற்பத்தி இயக்குநரகம் (DTDP) மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு (DSO) போன்ற துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து,  இந்தியாவில் சுமார் 41 ஆய்வகங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் DRDO துறையானது “இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராம்”  குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த “இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராமில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் பொது அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DRDO இன்டர்ன்ஷிப் 2025-க்கு விண்ணப்பிக்க 19 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.8,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்லூரி நிறுவனம் மூலம் DRDO ஆய்வகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”.

Leave a Reply