காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.
TNUSRB காலிப்பணியிடங்கள்:
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணிக்கென காலியாக உள்ள 1299 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNUSRB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
TNUSRB தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, PET, Viva-voce மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.