கூட்டுறவுத் துறையில் 3,353 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வாக்குறுதி
அரசு வேலை என்பது பலரது கனவாகவே உள்ளது. அரசு வேலை பெறுவதற்கென பலரும் தங்களை தயார் செய்து கொள்ள பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர். மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இது தவிர தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 13,266 பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வுகள் நடத்தப்பட்டு 9,913 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,353 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சட்டசபையில் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.