TNHRCE இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்தில் வேலை
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Staff Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள Medical Officer, Staff Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / DGNM (Diploma in General Nursing Midwives) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.14,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.