முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கான இலவச தையல் பயிற்சி / Free sewing training for families of ex-servicemen
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் குடும்பத்தினருக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வாய்ப்பு முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில், தையல் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்காக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் திரு. இரா.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள முகவரிக்கு நேரில் சென்று அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்:
முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம்,
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி எண்: 0462-2901440