முன்னாள் படைவீரா்கள் மனைவி, கைம்பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி- திருநெல்வேலி / Free sewing training for ex-servicemen’s wives and widows
முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள் இலவசமாக தையல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.