2030-க்குள் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இன்போசிஸ் அறக்கட்டளை திட்டம் / Infosys Foundation plans to create 5 lakh jobs by 2030
இன்போசிஸ் ஸ்பிரிங்போர்டு வாழ்வாதார திட்டம் ஒன்றை இன்போசிஸ் அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 லட்சம் பேர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்காக இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, இன்போசிஸின் டிஜிட்டல் லேர்னிங் தளமான இன்போசிஸ் ஸ்பிரிங்போர்டு, கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கும். கற்பவர்களுக்கு நிலையான வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கும்.
இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு வாழ்வாதாரத் திட்டம், STEM மற்றும் STEM அல்லாத துறைகளில் பட்டதாரிகள் மற்றும் இளங்கலைப் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், அதே போல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி போன்ற செயல்பாட்டுத் துறைகளில் தொழில்துறை தொடர்பான படிப்புகளை வழங்கவுள்ளது. மேலும், தகவல் பரிமாற்றத் திறன், நேர மேலாண்மை, பணி நேர்காணலுக்கானத் தயாரிப்பு ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கவுள்ளது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, ஐசிடி அகாடமி, உன்னதி, நிர்மான், மேஜிக் பஸ், ஆகா கான் கிராமப்புற ஆதரவு திட்டம், சென்டம், சிஐஐ அறக்கட்டளை மற்றும் என்ஐஐடி அறக்கட்டளை உள்ளிட்ட 20 செயல்படுத்தல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் பரந்த அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அர்த்தமுள்ள தொழில் பாதைகளை உருவாக்க முடியும் என்று அறக்கட்டளையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை அறங்காவலர் சுமித் விர்மானி இத்திட்டங்கள் குறித்துக் கூறும்போது,”கல்வி கற்றல் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை வளர்ப்பதற்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கானத் திட்டமே இது. நிபுணர்களுடன் கூட்டு சேர்ந்து, தொழில்துறை சார்ந்த பாடத்திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு வாழ்வாதாரத் திட்டம் இந்தியாவில் திறமையான இளைஞர்களுக்கு பலனளிக்கும் தொழில்களைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் தங்களைத் திறமைப்படுத்திக் கொள்ள அதிகாரம் அளிக்கிறது, இதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்க வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழி வகுக்கும்,” என்றார்.
ஐசிடி அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி வி.ஸ்ரீகாந்த் கூறும் போது,”மேல் நிலை ஐடி, கேபிஓ, பிஎஃப்எஸ்ஐ, சில்லறை விற்பனை, மின் வணிகம் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் திறமையான பணியாளர்களுக்கான தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அதன் அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதன் மூலம் வலுவான, எதிர்காலத்திற்குத் தயாரான இந்தியாவை உருவாக்க இன்ஃபோசிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

