Wed. Oct 22nd, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் / Employment camp in Villupuram district

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் / Employment camp in Villupuram district

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் திருவிழா

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழா 09.08.2025 அன்று ஸ்ரீ ரங்கபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சியில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு

வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை தேர்வு செய்யலாம்.

மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள!

இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழா தொடர்பாக மேலும் விபரங்களை அறிய ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு. நகர்ப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம்.

முக்கிய ஆவணங்கள்

வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், போர்ட் சைஸ் புகைப்படங்கள்-2 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

வயது வரம்பு

வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் கீழ்காணும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 40 வரை உள்ள ஆண்/பெண் (இருபாலரும்). கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை

வேலைவாய்ப்பு முகாம் (ம) இளைஞர்திறன் திருவிழா தொடர்பாக மேலும் விபரம் அறிய அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *