Sun. Oct 19th, 2025

சேலம் மாவட்டத்தில் ஆக. 9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp on Aug. 9 in Salem district

சேலம் மாவட்டத்தில் ஆக. 9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp on Aug. 9 in Salem district

சேலம் மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவிருக்கும் இந்த முகாமில், 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்துவித கல்வித் தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0427-240750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *