புதுச்சேரியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி / Cooperative Diploma Training in Puducherry
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து நடத்தும் பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வீரவெங்கடேஷ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இப்பட்டய படிப்பு இரு பருவங்களாக நடக்கிறது. இந்த வகுப்பில் சேர பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, நிர்வாகம், வங்கியல், கணக்கியல், தணிக்கை, கடன் மற்றும் கடன் சார்பற்ற சங்கங்கள், கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும், திட்ட அறிக்கை தயார் செய்தல் போன்றவை அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டுறவுத்துறை, கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பம் பதிவு
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோர் www.tncu.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள், ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த கட்டண ரசீது நகல் மற்றும் விண்ணப்பத்தினை பதி விறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் நேரில் வந்து பயிற்சிக்கான கட்டணம் ரூ. 20 ஆயிரத்து 750யை செலுத்தி நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.
வழிகாட்டு நெறிமுறை
கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை www.tncu.tn.gov.in ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0413- 2331408, 2220105 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பட்டயப் பயிற்சி
புதுச்சேரி , தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியப் பட்டயப் பயிற்சியானது (D.El.Ed) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கக்கூடிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 32 மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க சேர்க்கை உள்ள 12 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.