மாணவர்களே கல்விக்கடன் வாங்க போறீங்களா? / Students, are you going to take out education loans?
இந்தியாவில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என பல பெற்றோரும் விரும்புகின்றனர் .இதற்காக தங்கள் வசம் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்வது வங்கிகளில் கடன் வாங்குவது என பெரிய தொகையை செலவு செய்துதான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்படிப்புக்காக பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர்.தற்போது ஐடி துறையில் நிலைமை மோசமாக இருப்பதால் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கடன் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பெற்றோர் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்ய வேண்டும் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார் .தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, வெளிநாட்டில் சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருந்து பலரும் பெரிய அளவில் கல்வி கடன்களை வாங்கிவிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்கள் ஆனால் தற்போது ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.தங்களுடைய பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப கடன் வாங்கும் திட்டத்தில் இருக்கும் பெற்றோர் முதலில் இந்த விஷயத்தை கவனியுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பை படிப்பதற்காக 70 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி ஒரு மாணவர் ப்டிப்பதற்காக சென்றுள்ளார். ஆண்டுக்கு இந்த கடனுக்கு 12 சதவீத வட்டியை செலுத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் ஐடி துறையை மந்தமாகி இருக்கிறது.
குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது. ஆனால் அவர் இங்கே 70 லட்சம் கடனையும் செலுத்த வேண்டும் அதற்கான வட்டியும் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அமெரிக்க ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு தேர்ந்தெடுக்காமல் வைத்திருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்த விஷயத்தை பெற்றோர் கவனிக்க வேண்டும் மாணவர்களும் கவனிக்க வேண்டும் என தெரிவிக்கிறார். வெளிநாடு மட்டுமல்ல இந்தியாவிலே கூட நீங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்காக பெரிய அளவில் கடன் வாங்காதீர்கள் அது சிறந்த முடிவு கிடையாது என குறிப்பிட்டு இருக்கிறார்.உங்க முதலீட்டை பல மடங்காக உயர்த்தும் முத்தான 3 விதிமுறைகள்..
இத பின்பற்றினா வாழ்க்கையே மாறிடும்..கல்வி என்ற பெயரில் இளைஞர்களை கடன் வலையில் சிக்க வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என கூறும் அவர் நிறுவனங்கள் தங்கள் துறை சார்ந்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். அந்த வகையில் பெரிய அளவில் கல்வி செலவு இல்லாமல் நேரடியாக அவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி கிடைத்த விடும் என குறிப்பிட்டு இருக்கிறார்.மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செஞ்சிட்டீங்களா? உங்க விண்ணப்பத்தோட நிலையை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்வழக்கமான ஒரு பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டும் என கூறும் ஸ்ரீதர் வேம்பு, ஒரு நிறுவனமாக நாம் செய்யக்கூடிய சிறந்த முதலீடு ஊழியர்களுக்கு சிறந்த திறன் பயிற்சிகளை வழங்குவது தான் என தெரிவித்துள்ளார். இளம் வயதினர் கடன் வலையில் சிக்காமல் இருப்பதை தவிர்க்க நிறுவனங்கள் இந்த முயற்சியை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.