Sat. Aug 9th, 2025

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை – 105 காலியிடங்கள் / Job in the Revenue and Disaster Management Department – 105 vacancies

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை – 105 காலியிடங்கள் / Job in the Revenue and Disaster Management Department – 105 vacancies

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: கிராம உதவியாளர்

காலியிடங்கள்: 105

சம்பளம்: மாதம் ரூ.11,100 – 35,100

தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கும் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி, இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 21-லிருந்து 32-க் குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்டமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வட்டாட்சியர் அலுவலகம், சேலம் வட்டம், சேலம் மாவட்டம்.

நேர்முகத்தேர்வு நடை பெறும் நாள்: 6.10.2025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *