Sat. Aug 9th, 2025

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி – யுபிஎஸ்சி அறிவிப்பு / Officer jobs in central government departments: UPSC notification

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி – யுபிஎஸ்சி அறிவிப்பு / Officer jobs in central government departments: UPSC notification

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: 52/2025

பணி: Enforcement Officer,Accounts Officer

காலியிடங்கள்: 156

சம்பளம்: மாதம் ரூ.23,000

வயது வரம்பு: 30–க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட் டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Provident Fund Commissioner

காலியிடங்கள்: 74

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றி ருக்க வேண்டும். நிறுவனச் சட்டம், தொழிலாளர், பொது நிர்வாகம் போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கான ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ் நடத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினர் ரூ.25 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்ய

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *