Fri. Aug 8th, 2025

தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி / Cosmetology and hairdressing training through TAHDCO

தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி / Cosmetology and hairdressing training through TAHDCO

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி பெற அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி அளிக்க உள்ளது. இந்தப் பயிற்சியை பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த 8 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த, 18 முதல் 35 வயது வரையுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 45 நாள்கள் பயிற்சி நடைபெறும். சென்னையில் தங்கி ும் வசதியும் இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்த இளைஞா்களுக்கு தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை பெறலாம்.

இப்பயிற்சிக்கு தாட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி – 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *