தொழில் முனைவோராக வேண்டுமா.? தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி / Want to become an entrepreneur? Free training provided by the Tamil Nadu government
வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வரும் 28.08.2025 முதல் 30.08.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பிளாக் ஃபீனைல், கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர், வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப், டிடர்ஜென்ட் சோப், டெட்டால், எஸ்எஸ் மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஃப்ளோர் க்ளீனிங், ஃப்ளோர் கிளீனர், டிஷ்வாஷ் திரவம். சோப்பு திரவம் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர். கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் கடன் உதவிகள் மற்றும் மானியத்தை பற்றி விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8668102600 முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 . முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.