மகளிர் உரிமைத்தொகை – அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும், தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் / Women’s Right to Food – Antyodaya Anna Yojana Ration Card Holders and Individual Family Card Holders can apply for this scheme.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு, ரேஷன் கார்டு மட்டும் இருந்தாலே விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பொருள் இல்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இயலாது.
முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது, சொந்த பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை ஏதேனும் ஒன்றை மீறி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு இல்லை என்றால், தற்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ரேஷன் கார்டை அப்ளை செய்யலாம். பின் ரேஷன் கார்டு வந்தவுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.